கடந்த வாரம் ஒரு நாள் பேருந்தில் சென்று கொண்டு இருந்தேன்.சிக்னல் ஒன்றில் பேருந்து கொஞ்ச நேரம் நின்றது.
அப்பொழுது அருகில் ஒரு கார் நின்று கொண்டு இருந்தது.அதிலே வெளிநாட்டவரை சேர்ந்த 5 பேரு இருந்தார்கள்.
டிரைவர்க்கு பின் இருக்கையில் இருவர்,அதற்க்கு பின் இருக்கையில் இருவர்,கடைசியில் ஒருவர் என அமர்ந்து இருந்தார்கள்.
| Wear Seat Belt! |
இதில் என்ன வேடிக்கை என்று நீங்கள் கேட்பது தெரிகிறது,அந்த காரில் கடைசி இருக்கையில் அமர்ந்தவர் கூட சீட் பெல்ட் அணிந்து இருந்தார்கள் என்பதே அந்த வியப்பு! நம் நாட்டில் முன் இருக்கையில் அமர்பவர்களே கட்டாயத்தின் காரணமாகவே சீட் பெல்ட் அணிகிறார்கள் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்!
சாலைப் பாதுகாப்பு உயிர் காப்பு! இல்லையேல் அது நமக்கு ஆப்பு!
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again