இன்று பேருந்தில் வந்து கொண்டு இருந்தேன் அப்பொழுது நடந்த விசியங்கள் இது,
நல்ல போதைல ஒருத்தர் ஒரு ஸ்டாப்பில் ஏறினார்,நடத்துனர் எவ்வளவு சொல்லியும் படிக்கட்டை விட்டு மேல ஏறவே இல்லை,
அதோடு விட்டாரா மனிதன் டிக்கெட் எடுக்க ஒரு 5 ரூபாயை நீட்டி நடத்துனரிடம் ஒரு 3 ரூபாய் டிக்கெட் கொடு என்றார்.நடத்துனர் நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க என்றார்.குடி மகன் சொன்னார் நீ 3 ரூபாய் டிக்கெட் மட்டும் கொடு என்று.மீண்டும் நடத்துனர் கேட்டார் எங்கனு சொல்லுப்பா அப்பத்தான் நிறுத்த முடியும்னு சொன்னார்.விட்டாரா அவர் நீ என நிறுத்தறது நான் இறங்கிகறேன் என்றார்.கொஞ்ச நேரம் கழித்து அந்த நிறுத்தமும் வந்தது அப்பொழுது கூட குடிமகன் இறங்கவில்லை.நான் ஏன் இறங்கனும் ,இந்த 3 ரூபாய் ஸ்டாப் இன்னும் முடிலன்னு சொன்னார்!
பாவம் நடத்துனர்கள் இந்த மாதிரி எத்தனை பேரை டெய்லி சமாளிக்க வேண்டி இருக்கிறது!
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again