ஒரு நாள் பேருந்தில் செல்வதற்காக நான் காத்திருந்த பொழுது கண்ட உண்மை சம்பவம் இது.நெடு நேரம் நின்று இருப்பேன்,
அப்பொழுது கூடவே நின்று இருந்த ஒருவர் பர பரப்பாக இருந்தார்.சிறிது நேரத்தில் ஒரு பேருந்து வந்தது,மதிய நேரம் ஆகையால்
வந்த அந்த பேருந்து நிறுத்தாமல் வேகமாக சென்றது,அப்பொழுது அந்த பேருந்தில் படிக்கட்டில் நின்று இருந்த ஒருவர் ,பேருந்து நிறுத்தத்தில் என்னோடு நின்று இருந்த அந்த பர பரப்பான மனிதனிடம் ஏதோ ஒன்று சொல்லி இரண்டு 100 ரூபாய் நோட்டை காற்றிலே பறக்க விட்டார்.
அவர் பறக்க விட்ட அந்த நொடியிலே ,வாகனங்களும் சர மாரியாக போய்க் கொண்டு இருந்தது ,அதனால் அந்த இரண்டு 100 ரூபாய் நோட்டுகளும் இங்கும் அங்குமாய் பறந்தன.பணத்திற்கு சொந்தக்காரரான அந்த நபர் பின்னால் வந்த வண்டியைப் பார்ப்பதா இல்லை பணத்தைப் பார்ப்பதா என தெரியாமல் உயிரை பணயம் வைத்து முடிவில் இரண்டு 100 ரூபாய் தாள்களை எடுத்துக் கொண்டார்.
நல்ல வேலையாக அவருக்கு எதுவும் ஆகவில்லை.இப்படியும் நடந்து கொள்வார்களா?பணத்தை விட உயிர் துச்சமாக போய் விட்டதா ?என்ற கேள்விகள்
மீண்டும் மீண்டும் சரமாரியாக என்னுள் பயணித்தன அந்த சாலையில் பயணித்த வாகனங்களைப் போல அந்த மனிதர் சென்ற பிறகும்!

No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again