Wednesday, September 19, 2012

இனி ஒரு விதி செய்வோம்..இதுபோல் நடப்பதை தவிர்ப்போம்!

ராஜபக்சே வருகையை கண்டித்து சேலம் அருகே தீக்குளித்த மரியாதைக்குரிய ஆட்டோ டிரைவர் விஜயராஜ் (26 ) அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கின்ற அதே வேளையில்,இது போன்ற துயர சம்பவம் இனி நம்மிடையே நடக்காமல் இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் பிராத்தனை.
பல ஆயிரக்கணக்கில் உயிரை பலிகொண்ட தீவு இன்னும் அதன் பாதிப்பில் இருந்து மீளவில்லை என்பதோடு சேர்ந்து இந்த சம்பவமும் ஒரு துயரமே.
அன்னப் பறவை அடிபட்டதற்கு இரங்கிய சித்தார்த்தன் என்ற சாதாரண அரசன் தான் பின்னாளில் புத்தர் என்ற கடவுள் ஆனார்.அன்னப் பறவை அடிபட்டதற்க்கே இரங்கிய அவரை பின்பற்றுபவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
உலக அரங்கில் என்றோ சாமதனத்தை கடை பிடித்தவன் தமிழன் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பதால் தானோ தனக்கென்று ஒரு நாட்டை கட்டியமையாது போனான்.வீரத்தில் சிறந்த அவனே அன்பிலும் சிறந்தவனாய் இருந்தான்,அதனால் தானோ பல நரிகள் விரித்த வலையில் விழுந்தான்.
அடைய வேண்டிய லட்சியத்திற்கு உயிரை துச்சமாக இழப்பதில் மட்டும் அல்ல கோவமும் , வீரமும் .காலம் மாறுகிறது ,மாற்றம் தவிர்க்க முடியாதது.நம்பிக்கையோடு இனி ஒரு விதி செய்வோம் அதை அறிவோடு சேர்த்து அரசியல் கலந்து செய்வோம்! உயிரை மாய்த்து அல்ல !

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again