Sunday, September 9, 2012

சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி ?


சுவையான சிக்கன் பிரியாணி:
தேவையான பொருட்கள் :
சிக்கன் -1 /2 கிலோ
அரிசி - 2 டம்ளர்
பிரியாணி பவுடர் -25 கிராம்
இஞ்சி சிறிதளவு
சின்ன வெங்காயம் சிறிதளவு
தக்காளி - 2
உப்பு தேவைக்கு ஏற்ப
பூண்டு சிறிதளவு
பச்சை மிளகாய் - தேவைக்கு ஏற்ப
முந்தரி
திராச்சை
ஏலக்காய்
சோம்பு சிறிதளவு
தயிறு - 100 கிராம்
எலுமிச்சை பழம் -1
புதினா சிறிதளவு
கருவேற்பிலை சிறிதளவு
கொத்துமல்லி தழை சிறிதளவு




செய்முறை :
குக்கரை காஸ் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு ஆயில் ஊற்றி , ஆயில் காய்ந்ததும் அதில் சிறிது சோம்பு ,முந்தரி ,திராச்சை ,நசுக்கிய ஏலக்காய் சேர்த்து வணக்கவும் ,வணக்கன பிறகு அதோடு இஞ்சி ,பூண்டு ,ஒரு பச்சை மிளகாய் சேர்ந்த விழுதை போட்டு வணக்கவும் ,பிறகு அதோடு நறுக்கிய சின்ன வெங்காயம் ,நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வணக்கவும் .
இவைகள் நன்றாக வணங்கியவுடன் அதோடு சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து அதோடு தயிறு,பிரியாணி பவுடர் ,ஒரு எலுமிச்சை பழ சாறு இவைகளை சேர்த்த்து நன்றாக கிளறவும்.சுமார் 5 நிமிடங்கள் கழித்த பிறகு, இதோடு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மற்றும் உப்பு சேர்த்து அதனுடன் 2 டம்ளர் அரிசியையும் சேர்த்து நன்றாக கிளறவும் .
நறுக்கிய கொத்துமல்லி ,கருவேற்பிலை ,புதினா தழைகளை சேர்த்து நன்றாக கிளறி குக்கர் மூடி போட்டு நன்றாக மூடவும் .சிறிது நேரம் கழித்து விசில் போட்டு விட்டு, 2 விசில் வரும் வரை காத்து இருக்கவும் .2 விசில் வந்த பிறகு இறக்கி வைத்து விட்டு ஆவி அடங்கிய பிறகு குக்கர் மூடியை திறந்து பிரியாணியை நன்றாக கிளறவும்.
இப்பொழுது சூடான சுவையான சிக்கென் பிரியாணி ரெடி .இதோடு தயிறு பச்சடி சேர்த்து சுவைக்கவும்!

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again