Saturday, May 12, 2012

மும்பையில் ஒரு நாள் -தொடர் 1


டேய் என் ஊர்க்காரன் ஒருவன் நாளைக்கு இங்கு வரான்.நீயும் வா நாம் போய் அவனை கூட்டிக்கொண்டு வருவோம் என்றான்
அகிலன் (பெயர் மாற்றப் பட்டுள்ளது ).சரி என்று தலை அசைத்தவாறே சம்மதம் சொன்னான் சோழன் (பெயர் மாற்றப் பட்டுள்ளது )
அகிலனும்,சோழனும் மும்பையில் பிரபல தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்கள்.அகிலனின் உறவுக்கார பையன் ஒருவன்
சென்ட்ரல் கவர்மென்ட் எக்ஸாம் ஒன்று எழுதுவதற்காக மும்பை வர இருந்தான்.அவனை கூட்டிக் கொண்டு வருவதற்காகவே அகிலன் சோழனிடம் சொல்லி இருக்கிறான், நாம் போலாம் அவனை
அழைத்து வர என்று .
மறு நாள் இருவரும் லோகமான்ய திலக் டெர்மினல்க்கு சென்றார்கள் .லோகமான்ய திலக் இதற்க்கு முன் அவர்கள் சென்றது இல்லை .வேடிக்கை என்னவெனில் இருவருக்கும் ஹிந்தி கூட பேச தெரியாது .ஏனெனில் அவர்களும் மும்பைக்கு புதியவர்கள் .எப்படியோ அவர்கள் இருவரும் குர்லா ரயில்வே ஸ்டேஷன் சென்றார்கள்.குர்லா ரயில்வே ஸ்டேஷன் என்பது லோகமான்ய டெர்மினலுக்கு பக்கத்தில் உள்ள லோக்கல் ரயில்வே ஸ்டேஷன் .
இருவரும் எப்படியோ ஒரு வழியாக குர்லா ரயில்வே ஸ்டேஷன்க்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.
ஆனால் அவர்களுக்கு எப்படி லோகமான்ய திலக் போவது என்பது தெரியவில்லை.யாரை கேட்டாலும் அவர்களுக்கும் தெரியவில்லை .இதில் அவர்கள் பேசிய ஹிந்தி கூட சரியா ? என்று தெரியவில்லை .இப்படியே அவர்கள் அங்கு விழித்து கொண்டு இருந்தார்கள் .அப்பொழுது மும்பையில் வேறு மழை காலம் .
மும்பையின் மழைக்காலம் எப்படி இருக்கும் ?விழித்து கொண்டு இருந்த அகிலனும் ,சோழனும் லோகமான்ய திலக் சென்றர்களா ?
பொறுத்து இருந்து வாசிப்போம் தொடர் இரண்டில் !
இன்னும் சொல்லுவோம் .


2 comments:

  1. படிக்க படிக்க ஆவலாக இருக்கிறது....

    தொடருங்கள்...

    காத்திருக்கிறோம்..

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய தொழிற்க்களம் குழுவிற்கு!
    மும்பையில் ஒருநாள் என்ற தொடர் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் கருத்திற்க்கிணங்க எஞ்சிய ஒரு பகுதியையும் எழுதி மொத்தம் மூன்று தொடரோடு நிறைவு பெறுகிறது.
    மும்பையில் ஒரு நாள் தொடர் இரண்டு மற்றும் மூன்று இந்த இரண்டு தொடரையும் படித்து சுவைக்க !
    உங்கள் விமர்சனங்கள் மும்பையில் ஒரு நாள் தொடரைப் போன்று மற்ற பதிவுகளுக்கும் தொடரட்டும் !
    நன்றி !

    ReplyDelete

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again