Saturday, March 9, 2013

ஏன் தமிழீழம்

ஏன் தமிழீழம் ? தமிழீழத்தின் தேவை ? எதற்காக தமிழீழம் ?
--------------------------------------------------------------------------------------------
இது போன்ற ஆயிரம் கேள்விகள் இங்கே..........இதோ அதற்க்கான காரணங்களுள் சில உங்கள் பார்வைக்கு.

திரிகோணமலையில் நடைபெற்ற இலங்கையின் 65-வது விடுதலை நாள் விழாவில் பேசிய அந்நாட்டு அதிபர் ராஜபட்ச, தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது. நாட்டை இனரீதியாகப் பாகுபடுத்துவது நடைமுறை சாத்தியமில்லாதது என்று அறிவித்துள்ளார்.

லட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து, லட்சக்கணக்கான தமிழர்களை அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு புலம் பெறச் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிய ராஜபட்ச, ஒரே மொழி - ஒரே மதம் என்று சர்வாதிகாரப் பாதையில் இலங்கையை வழிநடத்தி வருகிறார். அவரை சர்வதேச போர்க்குற்றவாளியாக உலக நாடுகள் பார்க்கின்றன.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நீண்ட காலமாக அளித்துவந்த உறுதிமொழியை ராஜபட்ச மீறியிருக்கிறார். இதற்கு உலகெங்கும் வாழும் தமிழர்களும், இந்தியாவும், உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

1925 ஜூன் 25-ல் யாழ்ப்பாணத்தில் இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவர்கள், இலங்கை தமிழர் மகாஜன சபையுடன் செய்து கொண்ட உடன்பாடு முதன்முதலாக காற்றில் பறக்க விடப்பட்டது.


1944-ல் சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகள் என்று ஜெயவர்த்தனா அரசு நிறைவேற்றிய சட்டத்தை மாற்றி 1956-ல் பண்டாரநாயக அரசு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது.

1965-ல் அதிகாரத்தை பரவலாக்க தந்தை செல்வாவுடன் டட்லி சேனநாயகா செய்து கொண்ட ஒப்பந்தம் 1969-ல் கைவிடப்பட்டது. 1987-ல் ராஜீவ் காந்தியுடன் இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தம் 25 ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு சிங்களர்கள் சார்பில் ஈழத் தமிழினத்துக்கு கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

செய்தி :தினமணி

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again