Wednesday, September 5, 2012

இலங்கை மக்கள் தாக்கப்பட்ட செய்தியும் அதனை ஒட்டி தினமணி வெளியிட்ட தலையங்கமும் அதன் மீதான மூன்றாவது பார்வையும் !

நேற்று(செப்டம்பர் 4 ) தமிழகத்திற்கு புனிதப் பயணம் வந்து இருந்த இலங்கை மக்கள் மீது தமிழக அரசியல் கட்சிகள் காட்டிய உணர்ச்சி போராட்டம் உண்மையில் துருதிருச்டவசமானது.
சர்வதேச அரசியலில் உணர்சிகளுக்கு இடமில்லை என்பதை மேற்கோள் காட்டி தினமணியும் தனது தலையங்கத்தில் இதனை சுட்டி காட்டி உள்ளது !
சற்று யோசித்துப் பார்த்தால் , ஒரு சாதாரண மனிதனுக்கும் இது புரியும்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்ப்படையால்
தாக்கப் படுவதும் , இலங்கை தமிழர்களை , சிங்கள ராணுவம் துன்புறுத்துவதும் எவ்வளவு துருதிருச்டம் நமக்கு .அதைப்போல கடினமானதாக இல்லை என்றாலும் , தமிழகத்திருக்கு வந்த இலங்கை மக்கள் மீதான வெறுப்பை உண்மையில் உணர்சிகளுக்கு அப்பால் வைத்துதான் பார்க்க வேண்டி இருக்கிறது.இது சரியாய் தப்பா என்பதை காட்டிலும் இனி இது நம் வழி அல்ல என்பதே இங்கு சரியாக இருக்கும்!
தமிழனின் பங்கு உலக முன்னேற்றத்தில் தவிர்க்க முடியாதது என்பது முற்றிலும் உண்மை.அதை நிருபிக்க வேண்டிய தருணம் இது .
பண்டைய தமிழன் அரசியலிலும் கை தேர்ந்தவன்.அதனை நவீன தமிழனும் பின்பற்ற வேண்டிய தருணம் இது .
தொடர் நியமான அரசியல் மூலம் , சர்வதேச சமுதாயத்திடம் கவனத்தை ஈர்த்து அவர்கள் உதவியுடன் இலங்கை தமிழர்கள் நிம்மதியாகவும் ,
சுதந்திரமாகவும் ,சமமாகவும் இலங்கையில் நடத்தப் பட என்ன செய்ய வேண்டுமோ அதனை தான் நாம் செய்ய வேண்டுமே ஒழிய , நம் பாதை இதுவன்று.
ஒரு பெரிய லட்சியத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கும் நாம் , இந்த சிறிய செயல்களில் இறங்கி நம் மதிப்பை நாம் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பதே நன்று.இதனை இலங்கையில் உள்ள தமிழர்கள் மட்டும் அன்று உலகில் உள்ள தமிழர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உண்மை.
எப்பொழுதும் , எந்த அழிவுக்கும் மக்கள் மட்டும் காரணமாக இருக்க முடியாது , அப்படி இருக்க இலங்கையில் நடந்த , நடை பெறுகிற அனைத்திருக்கும்
இலங்கையில் வாழும் மக்கள் அவர்கள் சிங்கள மொழி பேசுவொர்களோ இல்லை தமிழ் மொழி பேசுவொர்களோ மட்டும் காரணம் என்று நீங்கள் நினைப்பீர்களே ஆனால் , அது உங்கள் அறியாமை !

இங்கே தவறு செய்பவர்கள் நிதானமாக செயல்படும் பொழுது , பாதிக்கப் பட்டவர்கள் மட்டும் உணர்ச்சிவயப் படுவது நன்றன்று!
நாமும் சர்வதேச அரசியலில் நியமாக ,உண்மையாக இறங்குவோம் நம்மிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து நிதானமாக ! உணர்ச்சிவயப் பட்டு அல்ல !

சர்வதேச அரசியலில் இறங்குவோம் ,உணர்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு இன்னும் நிதானமாக , ஆழமாக !

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again