பத்து ரூபாய் கொடுத்தான் வாங்காத சிவாஜி ராவ் (அந்த லோக்கல் பயனின்) நேர்மையை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.(இனி இந்த தொடரில் லோக்கல் பையன் என்பதற்கு பதில் மும்பை சிவாஜி ராவ் என்று தொடருவோம் ).அகிலன், சோழன்,சிவாஜி ராவ் மற்றும் அவரது நண்பன் எல்லோரும் இப்பொழுது குர்லாவில் இருந்து திலக் நகர் நோக்கி செல்லும் ரயிலில் ஏறி திலக் நகரை வந்தடைகிறார்கள்.
ரயிலை விட்டு அவர்கள் இறங்கியதும் ,டிக்கெட் செக்கர் அவர்களிடம் டிக்கெட் செக் பண்ணினார்கள் அப்பொழுது , டிக்கெட் செக்கர் அகிலன் மற்றும் சோழனிடம் எங்கு இருந்து டிக்கெட் எடுத்துக் கொண்டு வருகிறீர்கள் என்று கேட்க சற்றும் தாமதியாமல் சிவாஜி ராவ் டிக்கெட் செக்கரிடம் குர்லா ஸ்டேஷன் என்று சொல்கிறார்கள்.(இங்கு சிவாஜி ராவ் சொன்ன பதிலையும் பதிவு பண்ண விரும்புகிறேன் ,டிக்கெட் செக்கர் கேட்டவுடன் நீங்கள் மழுப்பி பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் நீங்கள் உண்மையே சொன்னாலும் அவர்கள் நம்பாமல் மீண்டும் மீண்டும் உங்களை தொந்தரவு செய்வார்கள் கேள்வி கேட்டு , அதனால் நான் உடனே பதில் சொன்னேன் என்று சிவாஜி ராவ் சொன்னார்)
அகிலனும் , சோழனும் திலக் நகரை அடைந்த பொழுதும் சிவாஜி ராவ் அவர்களை திலக் டெர்மினல் (எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கும் இடம் -திலக் நகர் என்பது லோக்கல் ரயில் நிற்கும் இடம் )வரை கொண்டு வந்து விட்டார்கள் .அதோடு நில்லாமல் அகிலனின் உறவுக்கார பையன் வரும் வரை சிவாஜி ராவ் காத்திருந்தார் .அதை உணர்ந்த அகிலனும் ,சோழனும் சிவாஜி ராவை கிளம்பும் மாறும் , தங்கள் இனி பார்த்துக் கொள்வதாகவும் நன்றி சொல்லி அனுப்பி வைத்தார்கள் .
மொழி தெரியாத இடத்தில் எப்படி மற்றவர்களை ஏமாற்றலாம் என்று நினைக்கும் பலர் உள்ள இந்த உலகத்தில் சிவாஜி ராவைப் போன்றவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர் எங்கு இருந்தாலும் கடவுள் அவருக்கு நன்மை செய்வாராக !
இக்கதை இத்துடன் நிறைவு பெறுகிறது ,இக்கதை சிவாஜி ராவ்க்கு (மும்பை லோக்கல் பையன் ) சமர்ப்பணம்!
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again