Saturday, November 12, 2011

என்ன செய்ய வேண்டும் இலங்கை தமிழர்கள் ?

இழந்த பெருமைகள் ,இழந்த சொந்தங்கள் , இழந்த உரிமைகள் இப்படி இழப்புகள் அதிகமான இலங்கை தமிழர்கள் இனி என்ன செய்ய வேண்டும் ?
வீரம் மிகுந்த தமிழ் இனம் இன்று மட்டும் அல்ல வரலாற்றில் கூட துரோகத்தால் தான் அழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தமிழினம் மறக்க கூடாது.
ஒற்றுமை இல்லாமல் இங்கே இனி நாம் வெற்றிபெற முடியாது .அறிவால்,கலையால்,ஆன்மீகத்தால்,வீரத்தால் , காதலால் ஏன் அரசியலால் வென்ற நாம் இப்போது எங்கே போனோம் ?
அரசியல் செய்ய வேண்டிய காலம் இங்கு வந்து விட்டது .உலக இலக்கியங்கள் இனி ஈழத்தின் தமிழனின் இழப்பை , உண்மையை பற்றி உலகெங்கும் பேச வேண்டும்.
எழுதுங்கள் தமிழர்களே ! உண்மையை எழுதுங்கள் ! உணர்வுகளை எழுதுங்கள் , இழப்புகளை எழுதுங்கள் !
உலகத்தின் மறுபக்கம் இதயங்கள் இருக்கிறது..எழுத வாருங்கள் தமிழர்களே....உங்கள் பதிவுகள் அழிக்கப்படகூடாது!!!


No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again