தவறு செய்தாய் அடா தமிழா
நீ தவறு செய்தாய் அடா!
வந்தாரை வாழவைத்து
தமிழனை வீதியில் விட்டாய் அடா தமிழா!
சாதிக்கென ஒரு குரலாய் ,
கட்சிக்கென ஒரு குரலாய் ,
மதத்திற்கென ஒரு குரலாய் ,
தனித்தனியாய் குரல் கொடுத்தாய் !
தமிழனத்தை தவிக்க விட்டாய் !
போரிலே புறமிடல் மானமாய் நினைத்தாய்,
அதனால் பலரை கல்லறையில் உறங்க வைத்தாய்!
விழித்துக் கொள்ளடா தமிழா
இனி நீ விழித்துக் கொள்ளடா!
அறிவை விழியாக்கி;
அரசியலை ஆயுதமாக்கி ;
விவேகத்துடன் புறப்பட்டால்தான்!
நீ தலை நிமிர்ந்து நிற்கவும் முடியும் ,
தமிழனென்று சொல்லவும் முடியும் !
இறப்பது தமிழனாக இருந்தாலும் ;
வாழ்வது தமிழாக இருக்கட்டும் !
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again