அகிம்சை போராட்டம் முடிவுக்கு வந்த போதே அதிகார பரவலாக்கம் வந்திருந்தால் ஆயுதப்போராட்டம் வந்திருக்காது !இப்போது மட்டுமல்ல இனியாவது அதிகார பரவலாக்கம் கொண்டு வர முடியும் .ஆனால் தொடர்ந்து அங்கிருந்து வரும் செய்திகள் நம்மை மீண்டும் மீண்டும் கவலையடைய செய்கின்றன .
அங்கே தொடர்ந்து பேரினவாதம் பிடிவாதம் பிடிக்கிறது .உலகில் எங்கெல்லாம் சிறுபான்மை இருக்கிறதோ அங்கெல்லாம் பேரினவாதம் அதன் முதுகில் ஏறி சவாரி செய்யவே நினைக்கிறது!
எந்த நாட்டில் சட்டம் எல்லா மக்களுக்கும் சமமாக இருக்கிறதோஅதுவே வளர்ந்த ஜனநாயக நாடாக இருக்கமுடியும்.தொடர்ந்து பேரினவாதம் தனது பழைய வேலையை தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் உலக தமிழர்களும் ,தாயக தமிழர்களும் இனி என்ன செய்ய வேண்டும் என்பதனை இனிவரும் வாரங்களில் நாம் பேசபோகிறோம்.
உண்மையில் இது பேசவேண்டிய நேரம் அல்ல .பேசியது வரை போதும் இனி ஒரு விதி செய்வோம் அறிவை,அரசியலை கையில் எடுப்போம் வாருங்கள் !
---விதி செய்வோம்.



Every Tamilan should regret for the incidents happened in srilanka...regret only is not solution for that so we have work on to give good life to our sisters and brothers of tamil eelam... i am really very happy abt your socail thinking.... so keep it up ....we are suppopoting you to ignite our people ...
ReplyDelete