Thursday, September 1, 2011

திரும்பிச் செல்கிறேன் - தொடர் எண் -1

ஒரே திசை நோக்கி செல்லும் இரு மாணவர்களுக்கு இடையே போட்டிகள் பலமாக இருக்கும் அதே நேரத்தில் எங்கேயோ சின்னதாய் ஒளிந்து கொண்டு இருக்கும் " ஈ கோவும்" தன் முகம் காட்டாமல் இருப்பதில்லை .
துளிவிட்ட ஈகோவையும் அன்பால் வென்றவன் அவன் .எங்கு தேவைகள் குறைகிறதோ அங்கு அன்பு மிகுதியாகும் என்று சொல்ல்வார்கள் .அது வெறும் வார்த்தை அன்று .ஆம் அவனுக்கான தேவை இல்லாதபொழுதும் அந்த அன்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பலமாதங்கள் கழித்து கிடைத்த ஒரு சந்தர்ப்பம் , இருவரும் சந்தித்துக்கொள்ள யார் முதலில் வந்து பார்ப்பது என்று யோசனை எழும் நேரம் ஆனாலும் மனதில் எழும் பல கேள்விகளை தகர்த்து எறிந்துவிட்டு அவன் பரபரப்பாக இருந்தபொழுதும் எனக்காக நேரம் ஒதுக்கியவன் அவன்!
வார்த்தைகள் குறையும் பொழுது உணர்வுகள் பேசுகிறது என்று சொல்வார்கள் .ஆம் நாங்கள் பேசுவது குறைவுதான் என்றாலும், எங்களுக்கிடையே தொலைவுகள் ஒரு தடையாய் இருந்தாலும் இதயத்தின் வழியே பெய்யும் அன்பு மழை மட்டும் எக்காலமும் பொய்த்துப்போனது இல்லை ...........

1 comment:

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again