Saturday, March 9, 2013

திசை மாறுகின்ற ஜெனிவா தீர்மானம், ம(றை)றுக்கப் படும் நீதி....

உலக அரங்கில் இதை விட பெரிய அரசியல் ஏதும் இருக்க முடியாது. இலங்கைத் தமிழர்களுக்கு நடந்த தவறு அதற்க்கான அனைத்து தகவல்களை வரலாறு எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் வெளிப் படுத்திய போதிலும் திட்டமிட்டு மறைக்கப் படுகின்றன நடந்த இனப் படுகொலைகள்.

அமெரிக்கவோ, இந்தியாவோ அதனதன் நாடுகளின் நலன்களைச் சார்ந்தே எந்த முடிவும் எடுக்கும் இலங்கைத் தமிழர்கள் விசியத்தில் என்று சமீபத்தில் மனோ கணேசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை எவ்வளவு உண்மை என்பது இன்று தெளிவாகிறது.

உலகில் ஆதாரங்கள் இல்லாத எத்தனையோ இனப் படுகொலைகள் இனப் படுகொலைகளாக ஏற்றுக் கொள்ளப் பட்டு இருக்கும் பொழுது , இலங்கை தமிழ் இனப் படுகொலைக்கான அனைத்து ஆதாரங்கள் இருந்தும் உலக சமுதாயம் இன்னும் மௌனமாக இருப்பது, உலக அரங்கில் ஐக்கிய நாட்டு மன்றத்தைப் போல உலக நாடுகளும் மனிதாபிமானம் எனும் விசியத்தில் இரட்டை வேடம் போடுகிறதோ என ஐயம் மட்டும் இல்லை உறுதியாகவே தோன்றுகிறது.

இன்னும் சில தளங்களில் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .இப்பொழுது விடுதலைப் புலிகள் தீவிர வாத இயக்கமா என்று விவாதிப் பதற்கான இடத்தில் நாம் இல்லை. தீவிர இனவாத அரசியலைப் பற்றியும் அதனால் நேற்று வரை என்ன நடந்தது ,இன்று என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மட்டும் தான் நம் விவாதம் இருக்க வேண்டுமே அன்றி வேறு எதைப் பற்றியாவது நாம் விவாதித்துக் கொண்டு இருப்போமானால் மீண்டும் ஒரு முறை நாம் தோற்றுப் போவோம் .

சர்வதேச அரசியலை உன்னிப்பாக கவனித்து நமக்கான ஒரு பலமான ஒன்றிணைந்த அரசியல் பலத்தை அல்லது தளத்தை உருவாக்கத் தவறுவோம் என்றால் அது இதுவரை இலங்கைத் தமிழர்கள் நடத்திய போராட்டங்களையும் ,அவர்களின் தியாகங்களையும் மண்ணுக்குள் புதைத்துவிடும்.

நீங்கள் செய்த போர் குற்றங்களை நீங்களே குழு அமைத்து நீங்களே அதற்க்கு மாற்று வழியைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது கேலியாக உள்ளது .தவறு செய்பவர்கள் இடத்தில் மீண்டும் மீண்டும் நியாயத்தையோ ,அதற்க்கான மாற்றத்தையோ எதிர்பார்ப்பது என்பது எந்த காலத்திலும் முடியாத ஒன்று அது அங்கு ஜனநாயக ஆட்சி நடந்தால் மட்டுமே சாத்தியம்.

ஒன்று மட்டும் நிச்சயம், மறுக்கப் படும் நீதி மட்டும் அல்ல தாமதப் படும் நீதியும் கூட குற்றமே!

அந்த வகையில் இந்த நூற்றாண்டில் செவ்வாய் கிரகத்தில் கால் வைத்தது சாதனையாக இருந்த பொழுதும் கண் முன்னால் நடந்த திட்ட மிட்ட இனப் படுகொலையை தடுக்கத் தவறியவர்கள் இருக்கும் இந் நூற்றாண்டு வேதனையானது. வெட்கப் பட வேண்டியது.

Photo: திசை மாறுகின்ற ஜெனிவா தீர்மானம், ம(றை)றுக்கப் படும் நீதி....

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again