Friday, February 3, 2012

64 வது சுதந்திர தினம் - ஓயாத தமிழனின் நிலை

ஒரு ஜனநாயக நாடு தன்னுடைய 64 வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகும் இவ்வேளையில் ,அந்த நாட்டின் சுதந்திரத்திற்கு பாடு பட்ட ஒரு இனம் இன்றும் அடிமையாகி வாழ்கிறது என்றால் என்ன வென்று சொல்வது ?
எவ்வளவு தியாகங்கள் அடா சாமி ? உணவு ,உடை ,இருப்பிடம் ,மொழி,பண்பாடு ,பழக்க வழக்கம் ,உறவு கடைசியாக உயிர்.எத்தனை இழப்புகள் இந்த 21 வது நூற்றாண்டிலும் .
இந்த சோகம் இன்னும் தொடருகிறது என்பது எவ்வளவு கொடுமையான விசியம் .அன்பென்பர் ,உலக மனிதாபிமானம் என்பர்,இறையாண்மை என்பர் ,ஜனநாயகம் என்பர் .ஈரம் உள்ளவர்களே எது மனிதாபிமானம் ? எது இறையாண்மை ?எது அன்பு ? எது சகிப்புத்தன்மை ?எது ஜனநாயகம் ? நீங்களே சொல்லுங்கள் உங்கள் ரத்தமும் சிவப்பு என்றால் ? உங்களுக்கும் காயங்கள் வலித்தால்? சொல்லுங்கள் எதை கேட்டோம் ? எதை கொடுத்தீர்கள் ?



கொடுக்காமல் போனதால் இன்று இரு நாடு ,இரு கொடி,இரு அரசு ?இரு இதயம் , ஆனால் ஒரு உயிர் யாரால் வந்தது இது ? சிந்திப்பதற்கு யாரும் இல்லை ! கேட்பதற்கும் யாரும் இல்லை !அப்போது யாரு கொடுப்பது ?
கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்பார்கள் ,அங்கெ தேரை வாழ்வதாய் சொல்வார்கள் , எங்களை சுற்றி ஏன் இல்லை ஈரம் நாங்கள் அழுது ,அழுது எம்மை சுற்றி கடல் நீர் தான் உப்பாய் போனது !
முடிவில்லாத ஒரு பயணத்தை நோக்கி எஞ்சிய இனம் நகர்கிறது ! இனியாவது சுதந்திரம் கிடைக்குமா ? இனியாவது உரிமை கிடைக்குமா ? நடுநிலமையான அரசன் ஆள்வானா?
ஈரத்தை தேடி ஒரு காஞ்ச மரம் !

இலங்கையின் சுதந்திரதினத்தை போற்றுவோம் தமிழனாய் தமிழனுக்கு உரிமை கிடைக்கும் பொழுது !




No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again