Sunday, August 28, 2011

சுதந்திரத்தையும் காவு வாங்கியது ஏனோ ?

புற்களின் மீதான பனித்துளிகள்;
என் பாதங்களை மீண்டும் நனைத்திடாதோ?
தவழ்ந்து விளையாடிய நதிகளையும் ;
பல்லாங்குழி விளையாடிய என் தோழிகளையும் ;
மீண்டும் நான் காண்பேனோ ?
இலைகளை தாலாட்டிய தென்றல்;
எனை மீண்டும் தழுவாதோ?
தாத்தா,பாட்டி ,சித்தப்பா ,சித்தி ;
அத்தை ,மாமா ,பெரியப்பா ,பெரியம்மா ;
என்று அன்போடு கூப்பிட்டு மகிழ்வேனா ?
தெள்ளு தமிழ் பேசி வந்த மழலை
குரல் கேட்பேனா ?
பதுங்கு குழிக்குள் நேற்று தூங்கிய ;
ஒரு தமிழச்சியின் கனவுகள் இன்று கல்லறையில் உறங்குகிறது !
காலையில் குழியின் அருகே விழுந்த குண்டு ;
கனவுகளை மட்டும் அல்ல ,சுதந்திரத்தையும் காவு வாங்கியது ஏனோ ?

2 comments:

  1. இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again