Sunday, February 3, 2013

தவறுகளுக்கு மதம்,மொழி,இனம்,நாடு என சாயம் பூசாதிருப்போம்! படைப்பின் மீதான பார்வையை விசாலமாக்குவோம்...

தவறுகளுக்கு மதம்,மொழி,இனம்,நாடு என சாயம்
பூசாதிருப்போம்!
படைப்பின் மீதான பார்வையை விசாலமாக்குவோம்...
-----------------------------------------------------------------------------

சட்டத்தின் முன் அனைவரும் சமம்: இதுதான் மதச் சார்பற்ற இந்திய அரசியலமைப்பு நமக்கு வழங்கி இருக்கின்ற சுதந்திரம். அந்த சட்டத்தின் முன் கமல்ஹாசன் என்ற ஒரு தனி மனிதனை மட்டும் தண்டிப்பது என்பதை விட அவருக்கு வழங்கப் பட்டு இருக்கின்ற அதாவது ஒரு கலைத் துறையைச் சார்ந்தவருக்கு வழங்கப் பட்டு இருக்கின்ற கருத்து சுதந்திரத்தைப் பறிப்பது அதுவும் மதம்,மொழி,இனம்,ஜாதி என்று பல காரணங்களால் பறிக்கப் படுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

அரசு ஒரு தணிக்கை குழு அமைத்து அதனால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு படைப்பு மற்றவர்களால் தடுக்கப் படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

மற்ற மாநிலங்களில் தொடங்கி ,மற்ற நாடுகளில் அந்த படம் அமைதியாக ஓடும் பொழுது தமிழ் நாட்டில் மட்டும் தடுப்பது என்பது யோசிக்க வேண்டிய விசியம்.

இஸ்லாம் முதற்க் கொண்டு பல மத மக்கள் அமைதியாக வாழும் மாநிலம் தமிழ்நாடு.அதன் அமைதியைக் கெடுப்பவர்கள் யார் என்பது மக்களுக்கே வெளிச்சம்.

வரலாறு என்பது பல உண்மைச் சம்பவங்களைக் கொண்டது ,உண்மைச் சம்பவங்களை மறைத்து விட்டு நீங்கள் வரலாறை எழுதினால் அது வரலாறாக இருக்காது ,மாறாக கற்பனைக் கதையாகவே இருக்கும்.

படைப்புகளை வெறும் படைப்புகளாகவே பார்ப்போம் ,வரலாற்றை சற்று உண்மையோடும் பார்ப்போம்,தவறுகளை தவறு செய்பவர்களை தனியாக மட்டுமே பார்ப்போம் .தவறுகளை மதம் ,இனம், மொழி,ஜாதி என சேர்த்து பார்க்காமல் இருப்போம்.

அவ்வாறு பார்ப்போம் ஆனால் அது நமக்கும்,நம்மைச் சர்ந்தவங்களுக்கும் நன்மை தராது.எல்லைகளைக் கடந்து நம் பார்வையை விசலமாக்குவோம். விஸ்வரூபம் உள்ளிட்ட எந்த படைப்பையும் அமைதியான வழியில் வரவேற்ப்போம்,தவறு இருந்தாலும் எடுத்துச் சொல்லுவோம் அமைதியாகவே. நாம் மதச் சார்பற்ற ஜனநாயக நாட்டினர்.

தூறல்[Thooral]

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again